Saturday, May 5, 2012

உழைப்பால் உயர்ந்தவர் பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்கள் !!!!

பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தொழில் துறைகளில் சம்மந்த பட்டவர்கள் தெரியாதவர்களே இருக்க முடியாது இ.டி .எ. நிறவனத்தை உருவாக்கியவர் இன்று தமிழ் நாட்டில் பெரும்பால மக்கள் துபாய் அபு தாபி ,மற்றும் பிற உலக நாட்டிலும் ஆயிரக்கணக்கானோர் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றால் அதற்கு அவருடைய உழைப்பு மிக முக்கியமானது .

.கிரசன்ட் கல்லுரி மற்றும் பெண்கள் கல்லுரி பள்ளிகூடங்கள் நிறுவினார் , அது இன்று திறம்பட செயல் ஆற்றிக்கொண்டு இருக்கிறது.  .பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் எம் .ஜி. ஆர் .அவர்களுக்கு நெருகிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது

இன்று சென்னையில் பழமையான அண்ணா மேல்ம்பாலம் கூட இ.டி .எ. நிறுவனம் தான் கட்டியது.

பி. எஸ்.ஏ . அப்துல் ரஹ்மான் அவர்களின் இளைமைக்காலம் 

பி. எஸ்.ஏ ,தனது பத்தாவது வயதிலேயே தனது இலட்சியங்களின் வழியில் பயணம் செய்ய மிகப்பெரும் கனவு கண்டவர்.

அக்காலத்தில் கீழக்கரை சமுதாயத்தில் பள்ளிக்கூடம் செல்லாத மாணவர்களை வீடு தேடி சென்று பள்ளி செல்ல வழியுறுத்தும் இயக்கத்தினை தனது நண்பர்களுடன் இணைந்து தலமையேற்று நடத்தியவர். தனது ஐந்தாம் வகுப்பு பள்ளி படிப்பினை கீழக்கரை ஹமீதியா பள்ளியில் முடித்தபின், இராமனாதபுரத்தில் கிருஸ்துவ மிஷனரிகளால் நடத்தப்படும் புகழ் பெற் றசுவாட்ஸ் பள்ளியில் இணைந்தார், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தகாலக்கட்டத்தில் இவருக்குள் எழும் கேள்விகள் ஏன் இது போன்ற தரமான பள்ளிகள் கிராமப் பகுதிகளில் குறைவாக அமைய ப்பெற்றுள்ளது? இதற்கான விடிவுதான் என்ன?

பி.எஸ்.ஏ. அவர்கள் தனது இளவயதிலேயே பணத்தின் மதிப்பினையும், பண்டங்கள் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் உணர்ந்தவரானார். தனது சமவயது மாணவர்களில் சிலர் தேவையான தின்பண்டங்கள் வாங்க போதுமான பணம் வைத்திருப்பதையும், மேலும் சிலர் தின்பண்டங்களே வாங்க பணமில்லாமல் வேடிக்கை பார்ப்பதையும் அறிந்து இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு முடிவு கட்ட தனது நண்பர்களுடன் இணைந்து தின்பண்டங்களை குறைந்த விலையில் மொத்த கொள்முதல் செய்து பணக்கார மாணவர்களுக்கு அதிக விலையில் விற்று அதன் மூலம் கிடைத்த இலாபத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவசமாக வினியோகித்து தனது தொழில் கோட்பாட்டிற்கு முன்னுரை எழுதினார்

தனது எட்டாம் வகுப்பினை முடித்த காலத்தில், இவரின் தனியாத வியாபாரத் தாகம் இவரது பள்ளிப்படிப்பினை தொடர முடியாமல் தொந்தரவு செய்ய தனது தந்தையார் புஹாரி ஆலிம் அவர்களின் அணுமதி பெற்று , தனது 20 ஆவது வயதில் தனது கையில் வெறும் 149 இந்திய ரூபாயும், ஒரு சின்ன துணிப் பையுமாக கொழும்பு வந்து சேர்ந்தார்,

சோதனையான காலக்கட்டம்..., முதலில் இவரது அறையில் வசித்து வந்த வியாபாரிகளின் மனதை அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வதன் மூலம் கவர்ந்தார். இதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தார். வைர வியாபாரியான தனது தந்தையருடன் முன்பு பலமுறை வைர வியாபரத்திற்காக கொழும்பு வந்தவர் அவர், அதனால் இதே வியாபாரத்தினால் கவரப்பட்டு அதனை பற்றிய நுட்பத்தினை மெல்ல மெல்ல கற்று அறிந்த பின்னும் அவருடய பொருளாதார சூழ்நிலை தனியாக வியாபாரம் செய்ய அனுமதிக்காத நிலையில் காலம் கனியும் வரை சில காலம் கொழும்பு நகரிலேயே அமைதி காத்தார். ஆனால் தனது வியாபார தொடர்புகளை எல்லையில்லமல் வளர்த்துக் கொண்டும் இருந்தார்.
விரைவில் ஒரு நேரம் சாதகமாக வந்தது, தனது தொழிலை முதலில் ஹாங்காங்கில் தொடர்ந்தவர் பின்பு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா,சிங்கப்பூர் என கீழ்திசை நாடுகள் முழுவதும் பரந்து விரிந்தது, இதுவே வள்ளல் அவர்களின் வாழ்க்கையில் இனிமையான தருணமாக கொள்ளலாம், வைரவியாபாரத்தில் அதீத ஈடுபாடு கொண்டு மேலை நாடுகளான பெல்ஜியம், அமெரிக்கா,தென் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளிலும் தனது தொழிலரசின் எல்லைகளை விரிவுபடுத்தினார்,

1950 களில் வைரத்தொழில் ஸ்தாபனத்தை ஹாங்காக் மற்றும் பெல்ஜியத்தில் நிறுவிய முதல் தென்னிந்தியர் இவர்தான் என்பது நாடறிந்த உண்மை. மதி நுட்பமும், விவேகமும், நுண்ணிய நினைவாற்றலும் தாம் பி. எஸ்.ஏ அவர்களின் மூலதனமாக இருந்திருக்க முடியும், எதார்த்த தன்மையும், நகைச்சுவை உணர்வும் ஒருங்கே பெற்ற வள்ளல் அவர்கள் ஒருவரின் குறையை நேர்த்தியாக,நகைச்சுவையுடன் அந்த நபரின் எதிரிலேயே சொல்லி விடுவதில் அவருக்கு நிகர் எவருமே இல்லை எனலாம்.

நன்றி- திரு எம்.எம்.முகைதீன்,மஹ்மூத் நைனா

Tuesday, May 17, 2011

ETA Group - The story of the Business Empire

Dubai-based ETA Star group began its journey in a small way on the Kilakarai coast in Tamil Nadu.

It is the far-sightedness of the Indian co-founder B.S. Abdur Rahman that has turned it from a single gem trading business to an empire with diverse interests. It is still 82-year-old Abdur Rahman, who steers the flagship ETA even as his eldest son and group finance director Arif B Rahman charts out new verticals to tap opportunities to position the conservative group as a value-based global entity.

Arif’s father began his career as a gem merchant in the 1950s in Sri Lanka. Later, he moved to Hong Kong and learnt business hands-on, creating the Buharia Holdings identity. It was only in 1973, that the ETA group was born.

Though the ETA group considers itself to be conservative, its value-based operations have put it on an “unimaginable” growth trajectory. From gem and diamond trading activity (it has diamond mines in South Africa), the group made a foray into construction by setting up the East Coast Construction Industries.

It took over 45 years for the group to build a foundation in India and start exploring global markets. The IT boom provided the extra push towards diversification. “Our know-how in India was the foundation for leading us to the Gulf, when it opened up in the 1970s,” says the dynamic finance honcho Arif Rahman, as he traces the journey of the conglomerate. The group, which virtually covers the A to Z of business opportunities today, is on the verge of crossing the $ 5 billion turnover mark for the year ending March 2008.

Mr Rahman, who took charge of the finance portfolio in 1985, says the group had at that time visualised India playing a major role in the global business scene. In view of this, Bitech, an IT company, was started in 1988.

Now, ETA has a workforce strength of 58,000 people in the United Arab Emirates and 10,000 plus employees in the Indian operations. As it has a large number of Indians working in UAE, ETA has come to be known as the ‘Ellam Tamizh Aatkal (all Tamilians)’ group.

The government stipulations make it mandatory for ETA to take on its workforce on sponsorship. The group has witnessed rapid growth in the Middle East after the Iraq war. With the property market in the region too opening up, foreign investors are on a buying spree.

“The growth will be unstoppable at least for the next five years. There is a sense of security - interest rates plummeting to a record low in 30 years, and the oil prices peaking, are all factors that are fuelling tremendous growth,” Mr Rahman said adding that the Dubai government’s vision is to position itself among the globe’s top ten destinations for business.

Small wonder then that the ETA Star group has embarked on building an ambitious upmarket multi-faceted Dubai Lifestyle city. The project, on 100 acres, is coming up along Emirates ring road, Dubailand, near Dubai International Airport. ETA is investing over Rs 2500 cr on the project.

Mr Rahman who is also Dubai Lifestyle city MD, said “it will be mixed-used project consisting of five star hotels, high-end residential villas, duplexes, shopping mall, multi-sports venues, sports academy, multi-purpose theatre etc.

Broadly, the ETA group’s activities can be demarcated into the engineering and construction line, which constitutes half of the overall turnover and the shipping line. In three to five years, the group is looking at having a fleet size of 30 vessels. In India too, the ETA group has Rs 15,000 cr investment committed covering power, real estate, IT parks, industrial projects etc. This will enable it to pursue its new diversification into civil aviation, where it has Rs 800 cr investment lined up.

Seeing itself as an integral part of India’s infrastructure story, the group has lined up long-term projects, covering the entire spectrum of power, manufacturing, retail, education and IT. On the old Mahabalipuram road, it has an ongoing Rs 1,000 cr IT park project. Using the know-how of the parent company East Coast Construction, it has also embarked on a Rs 300 cr tech park project in the same location.

Amidst his hectic schedule at ETA, the 47-year-old Arif Rahman allots himself a personal time of one hour for introspection every day. He, along with his sisters, is actively involved in implementing community development projects and self help group activities in his native Kilakarai in Ramanathapuram district.

At executive education programmes in Harvard, Arif, the father of three daughters, learnt that America may be the leader of the capitalistic world but everyone has to look east to find the spiritual way. “Externally attach and internally detach,” is how he signed off during a more-than-hour long interaction with ET, on a recent visit to Chennai.

http://economictimes.indiatimes.com/articleshowarchive.cms?msid=2902602

Monday, February 16, 2009

பள்ளிப் பண்

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாஃபீ கல்பீ கய்ருல்லாஹ்
நூரு முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா – ஹக்கு
லாயிலாஹா இல்லல்லாஹ்

இறைவா உனது கருணையினால்
.....இம்மை மறுமை பேறுகளைக்
குறையா தெமக்கு கொடுத்திடுவாய் !
.....கொடுமை யனைத்தும் தடுத்திருவாய்
நிறைவாயுள்ள நலன் ஈந்து
.....நெஞ்சம் மலரச் செய்திடுவாய் !
கறையாயுள்ள பகுதிகளைக்
.....கழுவித் தூய்மை யாக்கிடுவாய் !

பிறையாய்த் திகழும் எம்பள்ளி
.....பிறைபோல் வளர உதவிடுவாய் !
நிறைவாம் சீதக்காதி பெயர்
.....நின்றே நிலவும் நிறுவனத்தார்
நிறைவே கொள்ளத் துணைபுரிவாய்
.....நிலைபேறுடைய எம் கொள்கை
குறையா தோங்க அருள் புரிவாய் !
.....குறைகள் தீர்க்கும் கோமானே !

அறிவுக் கடலாம் கஸ்ஸாலி
.....அடையும் நெஞ்சின் விரிவைப்போல்
அறிவின் ஒளியாய் எம்நெஞ்சை
.....அழகாய் அமைப்பாய் அருளாளா !
செறியும் கல்வி எமக்கூட்டும்
.....சீரிய நேரிய ஆசிரியர்
அறியும் பெற்றோர் அனைவருக்கும்
.....அருளைப் பொழிவாய் ரஹ்மானே !

(இயற்றியவர் : பிறைப்பள்ளியின் நிறுவன முதல்வர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர், M.A. அவர்கள்)

Wednesday, January 7, 2009

என்னுயிர்த் தோழன் (புகைப்படம்)


Abdul Qaiyum alongwith Thaika Ahamed Nasir

நண்பர்கள் (புகைப்படம்)



Ha..Ha.. Ha..... What a camera Trick?
Aboobucker Siddique Holding Habeeb Mohammed
Photo Taken by : Abdul Qaiyum

பரிசளிப்பு (புகைப்படம்)



Prize awarded Abdul Qaiyum by one of the Trustee from the Seethakkathi Trust Late Janab MKM Abdul Kader
Loading...
Gadget by The Blog Doctor.